முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > விம்பிள்டன்: செரீனா வில்லியம்ஸ் சாம்பியன்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
விம்பிள்டன்: செரீனா வில்லியம்ஸ் சாம்பியன்!
காலில் சதைப் பிடிப்பினால் முழுத் திறனையும் வெளிப்படுத்த முடியாத தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸை நேர் செட்களில் தோற்கடித்து விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார் செரீனா வில்லியம்ஸ்.

விம்பிள்டனில் சற்று முன் நடந்து முடிந்த மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வீனஸ் வில்லியம்ஸை 7-6 (7-3), 6-2 என்ற நேர்செட்களில் 1 மணி 25 நிமிடத்தில் செரீனா வென்றார்.

முதல் செட்டில் வீனஸ் வில்லியம்ஸின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. ஆனால், தனது வேகமான சர்வ் திறனாலும், களத்தை முழுமையாக பயன்படுத்தி ஆடிய வேகத்தாலும் சம நிலையை எட்டி பிறகு டை பிரேக்கரில் வென்றார் செரீனா.

இரண்டாவது சுற்றில் கால் தசைப் பிடிப்பு வீனஸை பெரிதாக பாதித்த நிலையிலும் கடுமையாக போராடினார். ஆனால் பல ஏஸ்களை வீசி தனது சகோதரியை திணறடித்தார் செரீனா. இறுதி ஆட்டத்தின் தனது சகோதரியின் சர்வை உடைத்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஹரியானா டி.எஸ்.பி.-யாக சந்தீப் சிங் நியமனம்
வீனஸ்-செரீனா இன்று இறுதியில் மோதல்
நடுவரிடம் முர்ரே வாக்குவாதம்
கலப்பு இரட்டையர் இறுதியில் பயஸ் இணை
ஆன்டி முர்ரேயை வீழ்த்தி இறுதியில் ரோடிக்
ஹாஸை வென்று இறுதிக்கு முன்னேறினார் பெடரர்!