முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > வீனஸ்-செரீனா இன்று இறுதியில் மோதல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வீனஸ்-செரீனா இன்று இறுதியில் மோதல்
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்க சகோதரிகளான வீனச், செரீனா வில்லியம்ஸ் மோதுகின்றனர். இரட்டையரில் செரீனா-வீனஸ் இணை ஆஸ்ட்ரேலியாவின் ஸ்டோசர்-ரென்னே ஸ்டப்ஸ் இணையை எதிர்கொள்கின்றனர்.

ஆடவர் இரட்டியர் இறுதியில் அமெரிக்காவின் புகழ் பெற்ற பிரையன் சகோதரர்கள் இரண்டாம் தரவரிசையில் உள்ள டேனியல் நெஸ்டர்/நெனாத் ஜிமோஞ்ஜி இணையை எதிர்கொள்கின்றனர்.

வீனஸ் வில்லியம்ஸும், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் 4 முறை விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் இறுதியில் மோதியுள்ளனர். இருவரும் இரு முறை பட்டம் வென்றுள்ளனர்.

மொத்தமாக இருவரும் 20 முறை ஒருவரையொருவர் எதிர்த்து விளையாடியதில் 10- 10 என்று வெற்றிகள் இரு பக்கமும் சம நிலையில் உள்ளது.

இந்த முறை வீனஸ் வில்லியம்ஸ் எளிதான முறையில் வெற்றி பெற்று இறுதியில் நுழைந்துள்ளார் செரீனா வில்லியம்ஸ் சில சவாலான டென்னிஸை எதிர்கொண்டு இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இதனால் இன்றைய ஆட்டம் வீனஸ் பாகம் சாதகமாக முடிந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
நடுவரிடம் முர்ரே வாக்குவாதம்
கலப்பு இரட்டையர் இறுதியில் பயஸ் இணை
ஆன்டி முர்ரேயை வீழ்த்தி இறுதியில் ரோடிக்
ஹாஸை வென்று இறுதிக்கு முன்னேறினார் பெடரர்!
இந்திய செஸ் போட்டியில் 3 கிராண்ட் மாஸ்டர்கள்
ஆசிய இளைஞர் விளையாட்டில் இந்தியாவிற்கு மேலும் 2 தங்கம்!