விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆண்/பெண் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜிம்பாப்வேயின் காரா பிளாக் இணை 12ஆம் நிலையில் உள்ள ஆஸ்ட்ரேலிய-ஸ்பெயின் கலப்பு இரட்டையர் இணையான ஸ்டீபன் ஹஸ், ருவானோ பாஸ்கல் இணையை 6- 4, 6- 4 என்ற செட்களில் வீழ்த்தினார்.
மற்றொரு அரையிறுதியில் 9ஆம் தர நிலையில் உள்ள பகாமாஸ் வீரர் மார்க் நோல்ஸ், ஜெர்மனி வீராங்கனை குரோன்ஃபீல்ட் ஆகியோர் பிரிட்டன் - அமெரிக்க இணையான ஜேமி மூர்ரே-ஹூபர் இணையை 6- 2, 7- 5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினர்.
கலப்பு இரட்டையர் இறுதியில் பயஸ்-காரா பிளாக் இணை நோல்ஸ்-குரோன்ஃபீல்ட் இணையை எதிர்கொள்கின்றனர். |