முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > ஆன்டி முர்ரேயை வீழ்த்தி இறுதியில் ரோடிக்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆன்டி முர்ரேயை வீழ்த்தி இறுதியில் ரோடிக்
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் அரையிறுதியில் நேற்று அமெரிக்க வீரர் ஆன்டி ரோடிக் 3ஆம் நிலையில் உள்ள, பிரிட்டன் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆன்டி முர்ரேயை 6- 4, 4- 6, 7- 6, 7- 6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்துள்ளார்.

நாளை அன்டைபெறும் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரரும், ஆன்டி ரோடிக்கும் மோதுகின்றனர். முதல் செட்டில் பொறுமையாக ஆடிய ரோடிக், ஷாட்களை துல்லியமாக அடிப்பதில் கவனம் செலுத்தினார்.

140 மைல்கள் வேகத்தில் அடித்த சர்வ்கள் மூலம் ரோடிக்கும், முர்ரேயும் முதல் செட்டில் முறையே 5- 4 என்ற நிலையில் இருந்த போது முர்ரே சர்வ் செய்தார். இதில் 0- 30 என்று பின் தங்கிய ரோடிக் அதன் பிறகு தாக்குதல் முறையில் கிரவுண்ட் ஷாட்களை விளையாடி 30 - 30 என்று சமன் செய்தார்.

அதன் பிறகு அருமையாக ஒரு 'டிராப் ஷாட்' ஆடி பந்தை நெட்டிற்கு அருகிலேயே விழுமாறு செய்தார். அதன் பிறகு நீண்ட நேரம் இருவரும் பந்தை மாறி மாறி தட்டி வந்தனர். கடைசியில் முர்ரே ஒரு தவறு செய்ய முதல் செட்டை ரோடிக் கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில் ஆன்டி மூர்ரே அதிரடி ஷாட் ஒன்றின் மூலம் ரோடிக் சர்வை எதிர்கொண்டார், அதன் பிறகு ஃபோர் ஹேன்ட் ஷாட் ஒன்றை அடித்து ரோடிக் சர்வில் முர்ரே 0- 30 என்று முன்னிலை பெற்றார் அதன் பிறகு அடித்த பேக்ஹேண்ட் ஷாட்டில் ரோடிக் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. 4- 3 என்று முன்னிலை பெற்ற முர்ரே ரோடிக்கின் சில அபாரமான ஆட்டத்தை சமாளித்து அந்த செட்டைக் கைப்பற்றினார்.

கடைசி இரண்டு செட்களும் டை பிரேக்கருக்குச் செல்ல அதில் முர்ரேயின் தவறல்லாத டென்னிஸ் ஆட்டத்தின் இயல்பிலேயே இருக்கும் சில தவறுகள் முர்ரேயின் வெற்றி வாய்ப்பை பறித்தது. முர்ரே டை பிரேக்கர் தருணங்களில் சர்வ்களில் டபுள் ஃபால்ட் செய்தார். அந்த வகையில் 5 இரட்டைத் தவறுகளைச் செய்தார் முர்ரே.

முர்ரே ரோடிக்கைக் காட்டிலும் அதிக ஏஸ்களை அடித்தார். முதல் சர்வ், இரண்டாம் சர்வ் இரண்டிலும் ரோடிக்கிற்கு இணையாக இருந்தார். ஆனால் கிரவுண்ட் ஷாட்கள் முக்கிய நேரங்களில் முர்ரேயிற்கு கை கொடுக்காததால் தோல்வி அடைந்தார்.

முர்ரேயின் இந்த தோல்வியினால் ஆவலுடன் இருந்த பிரிட்டன் டென்னிஸ் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக விம்பிள்டன் செய்திகள் தெரிவிக்கின்றன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஹாஸை வென்று இறுதிக்கு முன்னேறினார் பெடரர்!
இந்திய செஸ் போட்டியில் 3 கிராண்ட் மாஸ்டர்கள்
ஆசிய இளைஞர் விளையாட்டில் இந்தியாவிற்கு மேலும் 2 தங்கம்!
9.5 வினாடிகள் போதுமானது-உசைன் போல்ட்
பயஸ்-பிளாக் இணை அரையிறுதியில்
இரட்டையர் இறுதியில் பிரையன் சகோதரர்கள்