விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார்.
இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில், உலகத் தரவரிசையில் 24 இடத்தில் உள்ள ஜெர்மனியின் டாமி ஹாஸை எதிர்கொண்டார் ரோஜர் பெடரர் (2).
முதல் செட்டில் இருவரும் தங்களது சர்வை இழக்காமல் ஆடியதால், ஆட்டம் டை-பிரேக்கருக்குச் சென்றது. டை-பிரேக்கரில் ரோஜர் பெடரரின் அனுபவம் வெளிப்பட்டது. 7-3 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார் பெடரர்.
2வது செட்டும் டை-பிரேக்கருக்குச் செல்லும் என்று எதிர்பார்த்த நிலையில், ஹாஸின் சர்வை உடைத்து 7-5 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார் பெடரர்.
ஆனால், 3வது செட்டில் கடும் போட்டி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹாஸின் சர்வ்களை எளிதாக உடைத்து 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார் பெடரர்.
எதிரில் விளையாடுபவரின் திறனை அடுத்தடுத்த செட்களில் கணித்து அதற்கேற்றார் போல் ஆட்டத் திறனை மாற்றி பெடரர் வெற்றி பெற்ற விதம், அவர் ஒரு டென்னிஸ் மாஸ்டர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது. |