கர்நாடக மாநிலம் மங்களூரில் நடைபெறவுள்ள அகில இந்திய செஸ் போட்டியில் இந்தியாவின் 3 கிராண்ட் மாஸ்டர்கள், 16 இந்திய மாஸ்டர்கள் உட்பட 400 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஜூலை 20ஆம் தேதி துவங்கும் இப்போட்டியில் கிராண்ட் மாஸ்டர்கள் பிரவீன் திப்சே, ஆர்.பி.ரமேஷ், அருண் பிரசாத் ஆகியோரும், ஜி.பி. பிரகாஷ், ரத்னாகரன், பால சுப்ரமணியம் உள்ளிட்ட இந்திய மாஸ்டர்களும் கலந்து கொள்கின்றனர் என்பதை செய்தியாளர்களிடம் கூறியுள்ள தென் கனரா மாவட்ட செஸ் சங்கத்தின் தலைவர் குருராஜ், இது சர்வதேச செஸ் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட போட்டி என்று கூறினார்.
|