முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > பயஸ்-பிளாக் இணை அரையிறுதியில்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பயஸ்-பிளாக் இணை அரையிறுதியில்
விம்பிள்டன் டென்னிஸ் ஆண்/பெண் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று ஒன்றாம் நிலையில் உள்ள இந்திய-ஜிம்பாப்வே இணையான லியாண்டர் பயஸ்-காரா பிளாக் இணை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

11 ஆம் நிலையில் உள்ள பிரேசில்/ஜப்பான் இணையான ஆந்த்ரே சா-அய் சுஜியாமா இணையை பயஸ்-காரா பிளாக் இணை 6- 3, 6- 3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு கலப்பு இரட்டையர் காலிறுதியில் பஹாமாஸ்/ஜெர்மனி இணையான மார்க் நோல்ஸ்- குரோன்ஃபீல்ட் இணை இரண்டாம் தரவரிசையில் உள்ள அமெரிக்க/ஆஸ்ட்ரேலிய கலப்பு இரட்டையர் இணையான பாப் பிரையன்/சமந்தா ஸ்டோசர் இணையை 0- 6, 7- 5, 6- 3 என்ற செட்கணக்கில் அதிர்ச்சி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இரட்டையர் இறுதியில் பிரையன் சகோதரர்கள்
சஃபீனாவை ஊதித் தள்ளினார் வீனஸ்
போராடி வென்று இறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்
விம்பிள்டனில் இன்றைய போட்டிகள்
தரவரிசையில் பிரேசில் முதலிடம் பிடித்தது
ஃபெரெரோவை வீழ்த்தி முர்ரே அரையிறுதியில்