விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க-பெல்ஜியம் இணையான வெஸ்லி மூடி-டிக் நார்மன் இணையை முதல் தரவரிசை அமெரிக்க இரட்டையர் இணையான பாப் பிரையன் - மைக் பிரையன் இணை 7-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க இணைகளான மார்டி ஃபிஷ்-ஜேம்ஸ் பிளேக் இணையை இரண்டாம் தரவரிசையில் உள்ள கனடா-செர்பிய இணையான டேனியல் நெஸ்டர், நெனாத் ஜிமோஞ்ஜி இணை 5- 7, 3- 6, 6- 2, 7- 6, 10- 8 என்ற செட்களில் போராடி வீழ்த்தினர்.
இறுதிப் போட்டியில் நெஸ்டர்-ஜிமோஞ்ஜி இணை அமெரிக்காவின் பிரையன் சகோதரர்கள் இணையை எதிர்கொள்கின்றனர்.
|