லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் 10ஆம் நாளான இன்று மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் செரீனா/டீமென்டீவா, வீனஸ்/சஃபீனா ஆகியோர் மோதுகின்றனர்.
ஆடவர் இரட்டையர் அரையிறுதியில் இன்று பூபதி-நோல்ஸ் இணையை வென்ற தென் அப்பிரிக்க-பெல்ஜியம் இணையான வெஸ்லி மூடி-டிக் நார்மன் இணை இரட்டையர் தரவரிசையில் முதலாமிடம் வகிக்கும் அமெரிக்காவின் சவால் இரட்டையர்களான பிரையன் சகோதரர்களை எதிர்கொள்கின்றனர்.
மீதமுள்ள ஒரே இந்திய வீரரான லியாண்டர் பயஸ் இன்று கலப்பு இரட்டையர் போட்டியில் காரா பிளாக்குடன் இணைந்து பிரேசில்/ஜப்பான் கலப்பு இரட்டையர் இணையான அந்த்ரே ஸா/அய் சூஜியாமா இணையை எதிர்கொள்கின்றனர்.
|