தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற கான்ஃபெடரேஷன் கோப்பை கால்பந்து தொடரில் தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டியில் அமெரிக்க அணியை 3- 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரேசில் சர்வதேச காலபந்து கூட்டமைப்பு (FIFA) அறிவித்த தரவரிசையில் ஸ்பெயினை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது.
கான்ஃபெடரேஷன் கோப்பை அரையிறுதியிச் அமெரிக்காவிடம் அதிர்ச்சித் தோல்வி தழுவிய ஸ்பெயின் கடந்த ஓராண்டு காலமாக கொண்டாடிய முதலிடத்தை இழந்து 2-வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
ஹாலந்து அணி 3-வது இடத்திலும், உலக சாம்பியன் இத்தாலி 4-வது இடக்த்திலும், ஜெர்மனி 5-வது இடத்திலும் உள்ளது.
இதற்கு அடுத்த வரிசைகளில் ரஷ்யா, இங்கிலாந்து, அர்ஜென்டீனா, பிரான்ஸ், குரேஷியா அணிகள் முதல் 10 இடங்களை ஆக்ரமித்துள்ளன.
அமெரிக்க அணி 2 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தில் உள்ளது.
|