விம்பிள்டன் டென்னிஸில் நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தர வரிசை வழங்கப்படாத ஸ்பெயின் வீரர் யுவான் கார்லோஸ் ஃபெரெரோவை, 3ஆம் நிலையில் உள்ள பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே 7- 5, 6- 3, 6- 2 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார்.
முர்ரே முழு ஆதிக்கம் செலுத்திய இந்த ஆட்டம் சுமார் ஒரு மணி நேரம் 41 நிமிடங்களிலேயே முடிந்து விட்டது.
'கொசு' என்ற செல்லப் பெயர் கொண்டு வேடிக்கையாக அழைக்கப்படும் ஃபெரெரோவை நேற்று உண்மையில் முர்ரே கொசுவை விரட்டுவது போல் விரட்டினார் என்றுதான் கூறவேண்டும்.
18 ஏஸ்களை முர்ரே அடித்தார் மாறாக ஃபெரெரோ 3 ஏஸ்களையே அடித்தார். இதனால் முதல் சர்வ்கள் வெற்றியாக முர்ரேயிற்கு அமைந்தது. முதல் சர்வ் சரியாக விழாமல் இரண்டாவது சர்வைப் போடும்போதும் மூரேஇயிற்கு வெற்றி விகிதம் அதிகமாக இருந்தது.
இரண்டாவது செட்டில்தான் ஃபெரெரோவிற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் சர்வ்களில் இருமுறை தவறு செய்து வாய்ப்பை நழுவ விட்டார்.
அரையிறுதியில் முர்ரே, அமெரிக்க வீரர் ஆன்டி ரோடிக்கை சந்திக்கிறார். |