விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் காலிறுதிப் போட்டியில் 4ஆம் நிலையில் உள்ள இந்திய-பகாமாஸ் இணையான மகேஷ் பூபக்டி-மார்க் நோல்ஸ், தென் ஆப்பிரிக்க-பெல்ஜிய இணையான வெஸ்லி மூடி/டிக் நார்மன் ஆகியோரிடம் 6- 7, 6- 4, 6- 7, 5- 7, 4- 6 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி தழுவினர்.
3 மணி நேரம் 37 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு இரட்டையர் ஜோடியும் அபாரமான சர்வீஸ் ஆட்டங்களை ஆடினர்.
டை-பிரேக்கருக்கு சென்ற ஆட்டங்களில் இரு ஜோடிகளும் சவாலான டென்னிஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் செட் டை பிரேக்கரில் இருவரும் சளைக்காமல் வெற்றி பெற்று வந்தனர் கடைசியில் ஒரே ஒரு சர்வை முறியடித்டு மூடி-நார்மன் ஜோடி 11- 9 என்று கைப்பற்றினர்.
பூபதி-நோல்ஸ் இணை 15 ஏஸ் சர்வ்களை போட்டனர். ஆனால் 8 டபுள் ஃபால்ட்டுகளையும், கிரவுண்ட் ஸ்ட்ரோக்குகளில் 17 முறையும் முக்கியக் கட்டங்களில் தவற்கள் செய்தது பூபதி இணையின் தோல்விக்கு காரணமானது. |