முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > விம்பிள்டன் அரையிறுதிக்கு பெடரர், ஹாஸ் முன்னேற்றம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
விம்பிள்டன் அரையிறுதிக்கு பெடரர், ஹாஸ் முன்னேற்றம்
விம்பிள்டன் கிராண்‌ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிக்கு சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரும், ஜெர்மனி வீரர் டாமி ஹாஸும் முன்னேறியுள்ளனர்.

இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், உலகத் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர், கார்லோவிச்சை (22) எதிர்கொண்டார்.

முதல் செட்டை 6-3 என்றும், 2வது செட்டை 7-5 என்றும் கைப்பற்றிய பெடரருக்கு 3வது செட்டில் கடும் போட்டி கொடுத்தார் கார்லோவிச்.

கடைசியில் டை-பிரேக்கரில் 7-3 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார் பெடரர்.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில், உலகத் தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள செர்பிய வீரர் ஜோக்கோவிச்சை, தரவரிசையில் 24 இடத்தில் உள்ள ஜெர்மனியின் டாமி ஹாஸ் 7-5, 7-6 (8-6), 4-6, 6-3 என்ற செட்கள் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
பதக்கம் விமர்சகர்களை மௌனமாக்கும்-சுஷில் குமார்
குவஹாத்தியில் இந்திய-ஆஸ்ட்ரேலிய ஒரு நாள் போட்டி
ரியால் மேட்ரிடில் காகாவிற்கு ஹாலிவுட் பாணி வரவேற்பு
ஆடவர் காலிறுதிப் போட்டிகள் இன்று
சானியா சாதனைகளை விட சாய்னா சாதனைகள் பெரிது-பிரகாஷ் படுகோன்
அஸரென்காவை வீழ்த்தி செரீனா அரையிறுதியில்