கிரெம்ளின் கோப்பை டென்னிஸ் போட்டித் தொடர் முதல் சுற்றில், செர்பியாவின் நட்சத்திர வீராங்கனை அனா இவானோவிச், தரவரிசையில் இல்லாத ஸ்லோவேகிய வீராங்கனை சிபுல்கோவாவிடம் அதிர்ச்சித் தோல்வி தழுவி 2-வது சுற்றிலேயே வெளியேறினார்.
உலகத் தரவரிசையில் 4-ம் நிலையில் உள்ள அனா இவானோவிச், 6-3, 2-6, 7-6 என்ற செட்களில் சிபுல்கோவாவிடம் அதிர்ச்சித் தோல்வி தழுவினார்.
மற்றொரு ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை தினாரா சஃபினா, பலம் வாய்ந்த பிரான்ஸ் வீராங்கனை அமேலி மௌரிஸ்மோவை 6-7, 6-4, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
காலிறுதியில் சஃபீனா மற்றொரு ரஷ்ய வீராங்கனையான ஸ்வெட்லானா குஸ்னெட்சோவாவை சந்திக்கிறார்.
மற்றொரு ரஷ்ய வீராங்கனை எலெனா டீமென்டீவா, ஸ்லோவேனிய வீராங்கனை காதரீனா ஸ்ரெபோட்னிக்கை 6-3, 4-6, 7-6 என்ற செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முனேறியுள்ளார்.
காலிறுதியில் டீமென்டீவாவும் நாடியா பெட்ரோவாவும் மோதுகின்றனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் வீரர்கள் ஜெர்மி சார்டி, சான்டாரோ ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ரஷ்ய வீரர் மைக்கேல் யூஸ்னி அதிர்ச்சித் தோல்வி தழுவி வெளியேறினார். பிரான்ஸ் வீரர் பால் ஹென்றி மேத்யூ 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். |