முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > சீனா மாஸ்டர்ஸ் பேட்மின்ட‌ன்: காலிறுதியில் சாய்னா!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சீனா மாஸ்டர்ஸ் பேட்மின்ட‌ன்: காலிறுதியில் சாய்னா!
சீனாவின் செங்சுவோவில் நடந்து வரும் சீனா மாஸ்டர்ஸ் சூப்பர் சீரிஸ் பேட்மின்ட‌ன் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முன்னேறியுள்ளார்.

PTI PhotoFILE
உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் இத்தொடரில், இன்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றுப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை அய்-கோடோ உடன் மோதிய சாய்னா, 21-12, 21-10 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இப்போட்டி மொத்தம் 21 நிமிடங்களே நீடித்தது.

நாளை நடைபெறும் காலிறுதிச் சுற்றில் தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள சீன வீராங்கனை லின்-சு உடன் சாய்னா மோத உள்ளார்.

கடந்த வாரம் நடந்த ஜப்பான் ஓபன் பேட்மின்டன் தொடரில் தோல்வியடைந்த சாய்னா, தற்போது நடந்து வரும் சீனா மாஸ்டர்ஸ் தொடரின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய ரசிகர்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
2010 காம‌ன்வெ‌ல்‌த்: து‌‌ப்பா‌க்‌‌கி‌ச் சுடு‌ம் ‌வீர‌ர்க‌ள் 150 பேரு‌க்கு ப‌யி‌ற்‌சி!
பயிற்சி, அதிர்ஷ்டம், கடவுள் ஆசி இருந்தால் பதக்கம்: சுஷில்குமார்!
கால்பந்து வீரர்களுக்கு இருதய சோதனை ஃபிபா முடிவு!
சீனா ஓபன்: ஜான்கோவிச் காலிறுதியில்!
டேவிஸ் கோப்பை அணிகளில் இந்தியாவிற்கு 23-வது இடம்!
பல்கலை‌க்கழக அளவிலான கபடி போட்டி: காமதேனு கல்லூரி முதலிடம் பெற்று சாதனை!