சீனா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றுக்கு செர்பிய வீராங்கனை ஜெலெனா ஜான்கோவிச் தகுதி பெற்றார்.
கனடா நாட்டு வீராங்கனை அலெக்சாண்ட்ரா வூஸ்னியாக் என்ற வீராங்கனையை 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜான்கோவிச் காலிறுதிக்குள் நுழைந்தார்.
உலக டென்னிஸ் தரவரிசையில் 2-வது இடம் பெற்ற ஜான்கோவிச் காலிறுதிச் சுற்றில் ஸ்லோவேகியா நாட்டு வீராங்கனை டேனியலா ஹண்டுசோவாவை சந்திக்கிறார். இவர் தாய்லாந்து வீரர் தானாசுகர்ன் என்பவரை 6-1, 0-6, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தார்.
ஆடவர் ஒற்றையர் ஆட்டங்களில் ஃபெர்னான்டோ வெர்டாஸ்கோ, ஜுவான் கார்லோஸ் ஃபெரெரோ ஆகிய இரண்டு ஸ்பானிய வீரர்கள் 2-வது சுற்றில் மோதுகின்றனர்.
அமெரிக்க வீரர் ஆன்டி ரோடிக், ஸ்பெயின் வீரர் டேவிட் ஃபெரர் இன்று மோதுகின்றனர். வெற்றி பெறும் வீரர் காலிறுதிக்கு முன்னேறுவார்.
|