முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > டேவிஸ் கோப்பை அணிகளில் இந்தியாவிற்கு 23-வது இடம்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
டேவிஸ் கோப்பை அணிகளில் இந்தியாவிற்கு 23-வது இடம்!
டேவிஸ் கோப்பை உலகச் சுற்று போட்டிகளுக்கு இந்திய டென்னிஸ் அணி தகுதி பெறாவிட்டாலும், டேவிஸ் கோப்பை தரவரிசைப் பட்டியலில் இந்தியாவிற்கு 23-வது இடம் கிடைத்துள்ளது.

ருமேனியா அணிக்கு எதிராக சமீபத்தில் முடிந்த டேவிஸ் கோப்பை ஆசிய ஓஸியானா பகுதி டென்னிஸ் போட்டியில் இந்தியா 1- 4 என்ற ஆட்டக்கணக்கில் தோல்வி தழுவி உலகச்சுற்றுகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

பிரிட்டன் அணி இந்த தரவரிசையில் 3 இடங்கள் வீழ்ச்சியடைந்து 24-ம் இடத்தில் உள்ளது. பிரேசில், பெரு அணிகளும் பிரிட்டனைக் காட்டிலும் உயர்வான தரவரிசை பெற்றுள்ளது.

ஆசிய டென்னிஸ் நாடுகளில் கொரியா முன்னிலை வகிக்கிறது. இந்த அணிக்கு தரவரிசையில் 20ஆவது இடம் கிடைத்துள்ளது.

பிரிட்டன் இன்னமும் ஒரு அணியை வீழ்த்தினால் உலகச் சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய டென்னிஸ் அணி மீண்டும் ஆசிய ஓஸியானா போட்டிச்சுற்றுகளில் விளையாட வேண்டி வரும்.
மேலும்
பல்கலை‌க்கழக அளவிலான கபடி போட்டி: காமதேனு கல்லூரி முதலிடம் பெற்று சாதனை!
ஏ.எஃப்.சி. கோப்பை அரையிறுதியில் டெம்போ!
லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம்: சுஷில் நம்பிக்கை!
400 மீ. தடை ஓட்டம் ஜாக்சன் வெற்றி!
சீன ஓபன்: மௌரிஸ்மோ தோல்வி!
ஆடவர் ஹாக்கி அணிக்கு புதிய பயிற்சியாளர்