இந்திய கால்பந்து லீக் சாம்பியன் அணியான கோவாவின் டெம்போ அணி சிங்கப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஹோம் யுனைடட் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஏ.எஃப்.சி. கோப்பை (AFC CUP) அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
கடந்த புதனன்று இரு அணிகளும் விளையாடிய முதல் சுற்று காலிறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது.
கிழக்கு வங்க அணியும், மஹிந்திரா யுனைடட் அணியும் சாதிக்க முடியாததை கோவா டெம்போ அணி நேற்று தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் சாதித்துள்ளது.
இந்தப் போட்டியை டெம்போ அணி ஒன்று வெற்றி பெற வேண்டும் அல்லது அரையிறுதிக்கு முன்னேற 2-2 என்று டிரா செய்ய வேண்டும். ஆனால் முதல் நிமிடத்திலேயே டெம்போ அணியின் காங்கோ வீரர் எம்போயோ இவோமி முதல் நிமிடத்திலேயே கோல் அடித்து முன்னிலை அளித்தார்.
ஆனால் 14-வது நிமிடத்தில் சிங்கப்பூரின் ஹோம் யுனைடட் அணித் தலைவர் ஆலிவைரா கோலை திருப்பி சமன் செய்தார்.
பரபரப்பு மேலும் கூட ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் டெம்போ அணியின் பிரேசில் நடுக்கள வீரர் ரொபெர்டோ மென்டஸ் சில்வா, கார்னர் ஷாட்டை தலையால் முட்டி கோலாக மாற்றி மீண்டும் டெம்போ அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார்.
அதன் பிறகு இரு அணிகளும் கடுமையாக மோதியதில் இடைவேளையின் போது இரு அணிகளும் 3-3 என்று சமநிலையில் இருந்தது.
இடைவேளைக்கு பிறகு 83-வது நிமிடத்தில் டெம்பொ அணியின் பிரேசில் வீரர் ரொபர்டோ மென்டெஸ் சில்வா அபாரமான ஒரு கோலை அடிக்க டெம்போ அணி வெற்றி பெற்றது.
|