முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > 400 மீ. தடை ஓட்டம் ஜாக்சன் வெற்றி!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
400 மீ. தடை ஓட்டம் ஜாக்சன் வெற்றி!
பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 400மீ தடை ஓட்டப்பிரிவில் வெண்கலம் வென்ற அமெரிக்க வீரர் பெர்ஷான் ஜாக்சன் ஜப்பானில் நடைபெற்ற சூப்பர் டிராக் ஃபீல்ட் தடகளப் போட்டிகளில் இதே பிரிவில் முதலிடம் வந்து வெற்றி பெற்றார்.

தன்னை நெருக்கமாக பின் தொடர்ந்த ஜப்பானிய வீரர் கெஞ்ஜி நரிசாகோவை முதலிடம் வரவிடாமல் ஓடிய ஜாக்சன் 49.33 வினாடிகளில் இலக்கைக் கடந்தார்.

ஜப்பானிய வீரர் நரிசாகோ 49.68 வினாடிகளில் இலக்கை எட்டி இரண்டாவது இடம் வந்தார்.

100மீ. தடகள ஓட்டப்பந்தயத்தில் பிரிட்டன் வீரர் ஹேரி அய்கைன்ஸ்-ஆரீடே 10.19 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் வந்தார்.

இதில் அமெரிக்க வீரர் மைக்கேல் ராட்ஜர்ஸ் இரண்டாவது இடமும், ஜப்பான் வீரர் அஸஹாரா 3-வது இடமும் வந்தனர்.

மகளிர் 100மீ. ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்க வீராங்கனை டேமு செர்ரி 13.07 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் வந்தார்.

மகளிர் 400மீ ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்க வீராங்கனை மிரியம் பார்ன்ஸ் 53.18 வினாடிகளில் இலக்கைக் கடந்து முதலிடம் வந்தார்.

சுத்தி எறிதல் ஆடவர் பிரிவு போட்டியில் ஜப்பான் வீரர் கோஜி முரோஃபியூஷி 81.02 மீட்டர்கள் எறிந்து முதலிடம் பெற்றார். பீஜிங் ஒலிம்பிக்கில் இதே பிரிவில் தங்கம் வென்ற ஸ்லோவேனிய வீரர் பிரைமோஸ் கோஸ்மஸ் என்பவர் இந்தப் போட்டியில் 78.59மீ. தூரம் விட்டெறிந்து 3-வது இடம் வந்தார். இரண்டாவது இடம் பெற்றவர் ஹங்கேரியின் கிறிஸ்டியன் பார்ஸ். இவர் எறிந்த தூரம் 80.67 மீட்டர்கள்.
மேலும்
சீன ஓபன்: மௌரிஸ்மோ தோல்வி!
ஆடவர் ஹாக்கி அணிக்கு புதிய பயிற்சியாளர்
டென்னிஸ் தரவரிசையில் சானியா சரிவு!
ஏ- 1 கிராண்ட்ப்ரீ கார் பந்தயம் இந்திய அணி அறிவிப்பு!
பஞ்சாப் தங்கக்கோப்பை ஹாக்கியில் ஜெர்மனி, பாக்.!
டேவிஸ் கோப்பை: இந்தியா படுதோல்வி!