முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > ஆடவர் ஹாக்கி அணிக்கு புதிய பயிற்சியாளர்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆடவர் ஹாக்கி அணிக்கு புதிய பயிற்சியாளர்
இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக, மகளிர் அணியின் பயிற்சியாளராக இருந்த கௌஷிக்கை நியமித்ததையடுத்து சச்சரவுகள் பெரிய அளவில் எழுந்தன, இதனால் கௌஷிக் மகளிர் ஹாக்கி அணி பயிற்சியாளராக தொடர்வதையடுத்து ஆடவர் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்கப்போவதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் இடைக்கால குழு கடந்த வாரம் மஹராஜ் கிஷன் கௌஷிக் என்பவரை ஆடவர் ஹாக்கி அணி பயிற்சியாளராக நியமித்தது. ஆனால் ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு வரை இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு அவர் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள போது, ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நியமித்தது சட்ட விரோதமானது என்று மகளிர் ஹாக்கி கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது.

கடைசியாக கடந்த சனியன்று இந்திய மகளிர் ஹாக்கி கூட்டமைப்பு ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் இந்த விவகாரம் தீர்த்து வைக்கப்பட்டது. இதன் படி கௌஷிக் மீண்டும் மகளிர் ஹாக்கி அணிப் பயிற்சியாளராக தொடர்கிறார்.

இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் ரந்திர் சிங், இடைக்கால குழு, ஆடவர் ஹாக்கி அணிக்கு வேறு ஒரு பயிற்சியாளரை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும்
டென்னிஸ் தரவரிசையில் சானியா சரிவு!
ஏ- 1 கிராண்ட்ப்ரீ கார் பந்தயம் இந்திய அணி அறிவிப்பு!
பஞ்சாப் தங்கக்கோப்பை ஹாக்கியில் ஜெர்மனி, பாக்.!
டேவிஸ் கோப்பை: இந்தியா படுதோல்வி!
ரோடிக்கை வீழ்த்தினார் நடால்! இறுதியில் ஸ்பெயின்!
பா‌ன் ப‌சி‌பி‌க் ஓப‌ன் டெ‌ன்‌னி‌ஸ்: ச‌ஃபினா சா‌ம்‌பிய‌ன்!