மகளிர் டென்னிஸ் உலகத் தரவரிசையில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஒற்றையர் பிரிவில் ஒரு இடம் பின்னடைவு கண்டு 92-வது இடத்தில் உள்ளார்.
இரட்டையர் மகளிர் டென்னிஸ் உலகத் தரவரிசையில் தனது 44ஆவது இடத்தை தக்க வைத்துள்ளார் சானியா மிர்சா.
மணிக்கட்டு காயம் காரணமாக நீண்ட நாளாக சானியா மிர்சா டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் இரட்டையர் தரவரிசையில் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஆகியோர் முறையே 8வது மற்றும் 11வது இடத்தை தக்க வைத்துள்ளனர்.
|