டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலகக் குழு நிலைக்கு உயரும் இந்திய டென்னிஸ் அணியின் கனவு தகர்ந்தது. பிரகாஷ் அமிர்தராஜ், சோம்தேவ் தேவ் வர்மன் தங்களது மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் தோல்வி தழுவியதால் ருமேனியா அணி 4- 1 என்ற ஆட்டக்கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
பிரகாஷ் அமிர்தராஜை, விக்டர் ஹனேச்கியூ 6- 2, 6- 3, 6- 1 என்ற செட் கணக்கில் வீழ்த்த, விக்டர் க்ரிவாய் என்ற மற்றொரு ருமேனிய வீரரிடம் சோம்தேவ் வர்மன் 6- 4, 5- 7, 3- 6 என்ற செட்களில் தோல்வி தழுவினார்.
இந்த தோல்வி மூலம் இந்தியா மீண்டும் ஆசியா/ஓசியானியா மண்டலத்தில் விளையாடி பிறகு உலகக் குழு மட்டத்திற்கு தகுதி பெற வேண்டும். இந்தியா கடைசியாக டேவிஸ் கோப்பை உலகக் குழுவில் விளையாடியது 1998-ஆம் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
|