முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > ரோடிக்கை வீழ்த்தினார் நடால்! இறுதியில் ஸ்பெயின்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ரோடிக்கை வீழ்த்தினார் நடால்! இறுதியில் ஸ்பெயின்!
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிடில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை அரையிறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் ஆன்டி ரோடிக்கை வீழ்த்திய ரஃபேல் நடால் ஸ்பெயின் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார்.

ரோடிக்கை 6- 4, 6- 0, 6- 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் ரஃபேல் நடால். இதன் மூலம் கடந்த முறை டேவிஸ் கோப்பை சாம்பியனான அமெரிக்காவை 3- 1 என்ற ஆட்டக்கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் இறுதிக்குள் நுழைந்தது.

தற்போது ஸ்பெயின் இறுதி போட்டியில் அர்ஜென்டீனா அணியை சந்திக்கும். ரஷ்யாவிற்கு எதிராக நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில் 3- 2 என்ற ஆட்ட கணக்கில் அர்ஜென்டீனா வென்றது.

நேற்று 2- 2 என்ற ஆட்டக் கணக்கில் பரபரப்பாக நடைபெற்ற ஒற்றையர் போட்டியில் ஐகோர் ஆந்த்ரீவ் என்பவரை 6- 4, 6- 2, 6- 1 என்று அர்ஜென்டீன வீரர் டெல் போர்ட்டோ வீழ்த்தி 3- 2 என்று வெற்றி பெறச் செய்தார்.
மேலும்
பா‌ன் ப‌சி‌பி‌க் ஓப‌ன் டெ‌ன்‌னி‌ஸ்: ச‌ஃபினா சா‌ம்‌பிய‌ன்!
டேவிஸ் கோப்பை: இந்தியா தொடர் தோல்வி!
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: பிரகாஷ் அமிர்தராஜ் தோல்வி!
என்.ஆர்.ஏ.ஐ. குற்ற‌‌ச்சா‌ற்று- பிந்த்ரா மறுப்பு!
100மீ ஓட்டப்பந்தயம் அசாஃபா போவெல் வெற்றி!
ஈட்டி எறிதல் - அனில் புதிய தேசிய சாதனை!