ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ரஷ்யா வீராங்கனை டினரா சஃபினா, சக நாட்டு வீராங்கனையான ஸ்வெட்லனா குஸ்னெட்சோவாவை நேர் செட்களில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவரும் தரவரிசையில் 5-வது இடத்தை வகிப்பவருமான ரஷ்ய வீராங்கனை சஃபினா, மற்றொரு ரஷ்ய வீராங்கனையும், தரவரிசையில் 7-வது இடத்தை வகிப்பருமான ஸ்வெட்லனா குஸ்னெட்சோவாவும் இன்று நடந்த இறுதிப் போட்டியில் மோதினர்.
ஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் சஃபினா 6-1, 6-3 என்ற நேர் செட்களில் குஸ்னெட்சோவாவை எளிதாக வீழ்த்தி முதன் முறையாக பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
|