முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அமெரிக்க தடகள பயிற்சியாளருக்கு ஆயுள் தடை!  Search similar articles
தடகள வீரர்களுக்கு ஊக்க மருந்துகளை வழங்கியதற்காக பயிற்சியாளர் டிரெவர் கிரகாமிற்கு அமெரிக்க ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் ஆயுள் தடை விதித்துள்ளது.

அமெரிக்க ஒலிம்பிக் குழு, சர்வதேச தடகள கூட்டமைப்பு, அமெரிக்க தடகள விளையாட்டுக் குழு நடத்தும் எந்த போட்டிகளிலும் இவர் பங்கேற்க முடியாது.

அமெரிக்க ஸ்டெராய்ட் மருந்து விற்பனையாளர் ஒருவருடன் இவருக்கு தொடர்பு இருந்ததாக இவர் மீது விசாரணை நடத்தப்பட்டபோது, அமெரிக்க விசாரணை அதிகாரிகளிடம் இவர் பொய் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மரியோன் ஜோன்ஸ், முன்னாள் 100 மீ. தடகள சாதனை வீரர்களான ஜஸ்டின் காட்லின், டிம் மான்ட்கோமெரி ஆகியோர் உட்பட டிரெவர் கிரகாமின் ஊக்க மருந்திற்கு இலக்கானவர்கள் நிறைய வீரர்கள் என்று அமெரிக்க தடகள அமைப்பு கூறியுள்ளது.
மேலும்
காலிறுதியில் போபண்ணா-குரேஷி இணை!
முதல் சுற்றிலேயே சானியா தோல்வி!
ஹங்கேரி ஒலிம்பிக் படகுப்போட்டி வீரர் கோலோனிக்ஸ் மரணம்!
மல்யுத்தம்: இந்தியா 13 பதக்கங்கள்!
பளுதூக்குதல்: ஒலிம்பிக்கில் மோனிகா தேவி!
பயஸ்-பூபதி இணைக்கு முதலாம் தரவரிசை!