முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஹங்கேரி ஒலிம்பிக் படகுப்போட்டி வீரர் கோலோனிக்ஸ் மரணம்!  Search similar articles
ஒலிம்பிக் துடுப்புப் படகு போட்டியில் இரண்டு முறை தங்கம் வென்று சாதனை படைத்த ஹங்கேரி வீரர் கியோர்கி கோலோனிக்ஸ் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

அடுத்த மாத‌ம் பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இவர் மற்றொரு ஒலிம்பிக் வீரர் கோஸ்மானுடன் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு படகிலேயே மயங்கிச் சரிந்ததாகவும், மருத்துவர்கள் சிகி‌ச்சை பலனளிக்கவில்லை என்றும் ஹங்கேரி ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

1996 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் 500 மீ. இரட்டையர் துடுப்புப் படகு போட்டியிலும், சிட்னி ஒலிம்பிக் போட்டியில் 500 மீ. தனி நபர் படகுப் போட்டி பிரிவிலும் தங்கம் வென்றார். மேலும் 1996 ஒலிம்பிக் போட்டிகளில் 1000 மீ. இரட்டையர் துடுப்புப் படகுப்போட்டியில் வெண்கலமும், 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் இதே பிரிவில் வெண்கலமும் வென்றுள்ளார் கோலோனிக்ஸ்.

பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் அவர் பங்கேற்றிருந்தால் அது அவரது 5-வது ஒலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
மல்யுத்தம்: இந்தியா 13 பதக்கங்கள்!
பளுதூக்குதல்: ஒலிம்பிக்கில் மோனிகா தேவி!
பயஸ்-பூபதி இணைக்கு முதலாம் தரவரிசை!
ஒலிம்பிக்: இந்தியா சார்பில் ஹர்வந்த் கெளர் பங்கேற்பார்
மகளிர் டென்னிஸ் தரவரிசையில் இவானோவிச் முதலிடம்!
தரவரிசையில் ஃபெடரர் முதலிடம்!