நீண்ட நாளைய விவாதங்கள், சோதனைகள் ஆகியவற்றிற்கு பிறகு இந்திய பளுதூக்கும் வீராங்கனை மோனிகா தேவியை பீஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பு தேர்வு செய்துள்ளது.
இரண்டாம் கட்ட சோதனைகளில், சமீப கால போட்டிகளில் சீரான முறையில் திறனை நிரூபித்தது, தற்போதைய திறன், முந்தைய சர்வதேச போட்டிகளில் வெளிப்படுத்திய திறன், எல்லாவற்றிற்கும் மேலாக சுமார் 27 முறை ஊக்க மருந்து சோதனைகளில் எந்த வித தவறுகளையும் செய்யாமல் இருந்தது ஆகியவை மோனிகாவிற்கு சாதகமாக இருந்ததால் ஒலிம்பிக்கிற்கு தேர்வு செய்ததாக, இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பு பொதுச் செயலர் பல்தேவ் ராஜ் குலாட்டி தெரிவித்தார்.
தோஹா ஆசியப் போட்டிகளில் வெள்ளி, வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளார் மோனிகா தேவி என்பது குறிப்பிடத்தக்கது.
|