முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பயஸ்-பூபதி இணைக்கு முதலாம் தரவரிசை!  Search similar articles
புது டெல்லி: அமெரிக்காவில் உள்ள இண்டியானாபோலிஸில் நடைபெறும் டென்னிஸ் தொடர் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய இணையான லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி இணைக்கு முதலாம் தரவரிசை வழங்கப்பட்டுள்ளது.

பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்குக் முன்னால் இவர்கள் இருவரும் விளையாடும் கடைசி ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விம்பிள்டனுக்கு முந்தைய ஹாலந்து டென்னிஸ் தொடரில் இவர்கள் இணைந்து விளையாடி இரட்டையர் இறுதி போட்டியில் தோல்வி தழுவினர்.

இண்டியானாபோலீஸ் டென்னிஸ் தொடரில் இவர்கள் முதல் சுற்றில் நாளை கனடா நாட்டு இரட்டையர் இணையான டேனியல் நெஸ்டர்-ஃபிரெடெரிக் நைமேயர் இணையை எதிர்கொள்கின்றனர்.

மற்றொரு ஆடவர் இரட்டையர் இணையான போபண்ணா-குரேஷி இணை முதல் சுற்றில் ரஷ்யாவின் இரட்டையர் இணையான குனிட்சிந்டுர்சுனோவ் இணையை எதிர்கொள்கின்றனர்.

ஸ்டான்ஃபோர்டில் நடைபெறும் மற்றொரு டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா ஒற்றையர் முதல் சுற்றில் பிரிட்டனின் ஆன்னி கியோதவாங் என்ற வீராங்கனை எதிர் கொள்கிறார். இதில் வெற்றி பெற்றால் 2-வது சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை மரியோன் பர்தோலியை எதிர்கொள்வார்.

அதே போல் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா-அன்னா சக்வெடாட்சே இணை செக். இணையான ஈவா ஹிருதினோவா- விளாதிமிர் உலிரோவா இணையை முதல் சுற்றில் எதிர்கொள்கின்றனர்.
மேலும்
ஒலிம்பிக்: இந்தியா சார்பில் ஹர்வந்த் கெளர் பங்கேற்பார்
மகளிர் டென்னிஸ் தரவரிசையில் இவானோவிச் முதலிடம்!
தரவரிசையில் ஃபெடரர் முதலிடம்!
ஸ்டான்ஃபோர்ட் டென்னிஸ்- டேவன்போர்ட் விலகல்!
ஜுனியர் ஹாக்கி:அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்!
தரவரிசையில் பிரகாஷ் 101 இடங்கள் முன்னேற்றம்!