முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஸ்டான்ஃபோர்ட் டென்னிஸ்- டேவன்போர்ட் விலகல்!  Search similar articles
கலிபோர்னியாவில் நடைபெறும் பேங்க் ஆஃப் தி வெஸ்ட் கிளாசிக் டென்னிஸ் தொடரிலிருந்து காயம் காரணமாக அமெரிக்க வீராங்கனை டேவன்போர்ட் விலகியுள்ளார்.

விம்பிள்டன் 2-ம் சுற்று ஒற்றையர் ஆட்டத்தின் போது விலகிய பிறகு டேவன்போர்ட் இந்த போட்டியில் விளையாட நினைத்திருந்தார். ஆனால் வலது முழங்கால் காயம் காரணமாக அவர் இந்த போட்டித் தொடரிலிருந்தும் விலக நேரிட்டுள்ளது.

முதல் சுற்றில் இவர் ஃபிரான்செஸ்கா ஷியாவோனை எதிர்த்து விளையாடுவதாக இருந்தது. தற்போது இவருக்கு பதிலாக கனடா வீராங்கனை வூஸ்னியாக் சேர்க்கப்பட்டுள்ளார்.

திங்களன்று நடைபெற்ற போட்டியில் ஜப்பான் வீராங்கனை சூஜியாமா, அலிசா கிளெய்பனோவா, சிபில் பாம்மர் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
மேலும்
ஜுனியர் ஹாக்கி:அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்!
தரவரிசையில் பிரகாஷ் 101 இடங்கள் முன்னேற்றம்!
இறுதியில் அமிர்தராஜ் தோல்வி!
ஒலிம்பிக்கிற்கே முக்கியத்துவம்-ரொனால்டினோ!
சுரேந்திர சிங் ஒலிம்பிக் தகுதி!
நீச்சல்: வீர்தவால் கேத் தேசிய சாதனை!