6-வது ஆசிய ஜுனியர் ஹாக்கி போட்டிகள் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன.
இந்த போட்டித் தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. `ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி ஜப்பான், மலேசியாவை வீழ்த்தி ஏற்கனவே அரையிறுதியை உறுதி செய்து விட்டது.
இந்த நிலையில் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று சிங்கப்பூரை எதிர்கொண்டது. இதில் தொடக்க முதலே அபாரமாக ஆடிய நடப்பு சாம்பியன் இந்தியா 6-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது.
திவாகர் ராம் 3 கோலும், ரோஷன் மின்ஸ், சுனில், குர்விந்தர் சிங் ஆகியோர் தலா ஒரு கோலும் போட்டனர். இதன் மூலம் தனது பிரிவில் முதலிடத்தை பிடித்த இந்தியா, 'பி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த பாகிஸ்தானை அரையிறுதியில் சந்திக்கிறது.
மற்றொரு அரையிறுதியில் தென்கொரியா, ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
|