நியூபோர்ட்டில் நடைபெற்ற ஹால் ஆஃப் ஃபேம் ஏ.டி.பி. டென்னிஸ் தொடரில் ஒற்றையர் இறுதி வரை சென்ற இந்திய வீரர் பிரகாஷ் அமிர்தராஜ், தரவரிசையில் 101 இடங்கள் முன்னேறி 204-வது இடத்திற்கு உயர்ந்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஒற்றையர் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் வீரர் சான்டோரோவிடம் இவர் தோற்றாலும் 191 புள்ளிகளை அவர் பெற்றதால், தரவரிசையில் இவ்வாறு முன்னேற முடிந்துள்ளது.
இரட்டையர் தரவரிசையில் பயஸ், பூபதி ஆகியோர் முறையே 15-வது, 12-வது இடங்களில் உள்ளனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் சானியா மிர்சா 33-வது இடத்திலும், இரட்டையர் பிரிவில் 18வது இடத்திலும் உள்ளார்.
|