முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அமிர்தராஜ்-குரேஷி சாம்பியன் பட்டம்!  Search similar articles
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடைபெற்ற ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் இரட்டையர் சாம்பியன் பட்டத்தை இந்திய-பா‌கி‌ஸ்தா‌ன் இணையான பிரகாஷ் அமிர்தராஜ்-குரேஷி இணை வென்றது.

பிரிட்டனின் ஜொனாதன் முர்ரே, டென்மார்க்கின் ஃபிரெடெரிக் நீல்சன் இணையை 6- 3, 7- 6 என்ற செட்களில் அமி‌ர்தராஜ்-குரேஷி இணை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய-பாகிஸ்தான் இணைக்கு 3,950 யூரோ பரிசுத் தொகை கிடைத்துள்ளது. மேலும் 60 ஏ.டி.பி. தரவரிசைப் புள்ளிகளையும் இந்த இணை பெற்றுள்ளது.

இந்த தொடரில் பங்கேற்ற மற்றொரு இந்திய இரட்டையர் இணையான அஷுடோஷ் சிங்-ஹர்ஷ் மன்கட் இணை முதல் சுற்றில் தோற்றது.

ஒற்றையர் போட்டியில் பிரகாஷ் அமிர்தராஜ் ஆஸ்ட்ரேலிய வீரர் ராபர்ட் ஸ்மீட்ஸிடம் காலிறுதியில் தோல்வியை தழுவினார்.
மேலும்
ஷட்லரை வீழ்த்தினார் நாடல்!
மாரட் சாஃபினை வென்றார்! இறுதியில் ஃபெடரர்!
பேட்மின்டன் தரவரிசையில் சய்னா நேவால் முன்னேற்றம்!
ஷட்லர் வெற்றி! நாடலுடன் அரையிறுதி!
தொடர்ந்து நழுவி வரும் ஒலிம்பிக் தகுதி!
ஒற்றையர் இறுதியில் வீனஸ்-செரீனா மோதல்!