விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் ஜெர்மனி வீரர் ரைனர் ஷட்லரை நேர் செட்களில் வீழ்த்தி ஸ்பெயின் வீரர் ரஃபேல் நாடல் இறுதிப்போட்டியில் ஃபெடரரை சந்திக்கிறார்.
நேற்று நடைபெற்ற இந்த ஒற்றையர் ஆட்டத்தில் ரஃபேல் நாடல் 6- 1, 7- 6, 6- 4 என்ற நேர் செட்களில் ஷட்லரை வீழ்த்தினார். முதல் செட்டில் 20 நிமிடங்களில் ஷட்லரை வீழ்த்திய நாடல் இரண்டாவது செட்டில் தனது ஒரு சர்வில் தோற்றார். ஆனால் மீண்டும் ஷட்லரின் சர்வை முறியடித்து 5- 5 என்று சமன் செய்து பிறகு டைபிரேக்கரில் 7- 3 என்று நாடல் வெற்றி பெற்றார்.
பிறகு 3-வது செட்டில் ஷட்லர் சில தவறுகளை செய்தார். இதனால் நாடல் சுலபமாக 6- 4 என்று வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தார்.
ஞாயிறன்று ஃபெடரர்-நாடல் ஆகியோருக்கிடையேயான பரபரப்பான இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
|