முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மாரட் சாஃபினை வென்றார்! இறுதியில் ஃபெடரர்!  Search similar articles
விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை 2003ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறை வென்ற சு‌வி‌ட்ஜ‌ர்லா‌ந்து ‌வீர‌ர் ரோஜர் ஃபெடரர் 6வது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

விம்பிள்டனில் சற்று முன் நடந்து முடிந்த முதல் அரையிறுதிப் போட்டியில் ரஷ்யாவின் மாரட் சாஃபினை 6-3, 7-6 (7-3), 6-4 என்ற நேர் செட்களில் ஃபெடர ர் வென்றார்.

புல் களங்களில் தான் ஈடிணையற்ற வீரன் என்பதை தனது அபார ஆட்டத்தின் வாயிலாக இன்றும் மெய்ப்பித்தார் ஃபெடரர். 10 ஏஸ்களுடன் சிறப்பாக சர்வ் செய்து ஆடிய அவரது ஆட்டத்திற்கு இந்த அளவிற்கு சாஃபின் ஈடுகொடுத்ததற்குப் பாராட்டவேண்டும்.

1 மணி 40 நிமிடத்தில் முடிந்த இப்போட்டியில் இரண்டாவது செட்டில் மட்டுமே கடும் போட்டி நிலவியது. டை- பிரேக்கரில் சிறப்பாக சர்வ் செய்து 7-3 என்ற கணக்கில் வென்று அந்த செட்டைக் கைப்பற்றினார் ஃபெடரர்.

கடந்த ஆண்டு 5வது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்று பியான் போர்கின் சாதனயை சமன் செய்த ஃபெடரர், இம்முறையும் ரஃபேல் நாடலைத்தான் எதிர்கொள்ளவேண்டியதிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது நடைபெற்றுவரும் இரண்டாவது அரையிறுதியில் ரஃபேல் நாடல், ஜெர்மனி வீரர் சுட்லரை 4-0 என்ற ஆட்டக்கணக்கில் முன்னணியில் உள்ளார்.

பயஸ் இணை தோற்றது!

விம்பிள்டனில் சற்று முன் நடந்து முடிந்த இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - செக் குடியரசின் லூக்காஸ் டிலோயி இணையை 7-6 (7-4), 4-6, 6-1, 4-6, 8-6 என்ற செட்கள் கணக்கில் கனடாவின் டானியல் நெஸ்டர் - செர்பியாவின் நேனாட் ஜிமானிச் இணை வென்று இறுதிக்கு முன்னேறியது.
மேலும்
பேட்மின்டன் தரவரிசையில் சய்னா நேவால் முன்னேற்றம்!
ஷட்லர் வெற்றி! நாடலுடன் அரையிறுதி!
தொடர்ந்து நழுவி வரும் ஒலிம்பிக் தகுதி!
ஒற்றையர் இறுதியில் வீனஸ்-செரீனா மோதல்!
விம்பிள்டன்: இறுதிக்கு முன்னேறினார் வீனஸ் வில்லியம்ஸ்!
பி.எம்.சி. தடகளம்: இந்தியா 3 தங்கம்!