முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பேட்மின்டன் தரவரிசையில் சய்னா நேவால் முன்னேற்றம்!  Search similar articles
கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய சர்க்யூட் பேட்மின்டன் தொடரில் அபாரமாக விளையாடிய இந்திய பேட்மின்டன் இளம் வீராங்கனை சய்னா நேவால் உலக தரவரிசையில் 18-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தேசிய சாம்பியனான இவர் வரும் பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் நடந்த ஆசிய பேட்மின்டன் தொடரில் முன்னணி வீராங்கனைகளுக்கு தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அதிர்ச்சி அளித்தார் சய்னா. சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் தொடரில் அரையிறுதி வரை முன்னேறினார் இவர்.

ஆடவர் பேட்மின்டன் தரவரிசையில் இந்திய வீரர் அனுப் ஸ்ரீதர் 31-வது இடத்திலும், சேத்தன் ஆனந்த் 41-வது இடத்திலும், அரவிந்த் பட் 42-வது இடத்திலும் உள்ளனர்.
மேலும்
ஷட்லர் வெற்றி! நாடலுடன் அரையிறுதி!
தொடர்ந்து நழுவி வரும் ஒலிம்பிக் தகுதி!
ஒற்றையர் இறுதியில் வீனஸ்-செரீனா மோதல்!
விம்பிள்டன்: இறுதிக்கு முன்னேறினார் வீனஸ் வில்லியம்ஸ்!
பி.எம்.சி. தடகளம்: இந்தியா 3 தங்கம்!
இந்திய மகளிர் ரிலே அணி தகுதி பெறவில்லை!