முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஷட்லர் வெற்றி! நாடலுடன் அரையிறுதி!  Search similar articles
விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் ஆர்னாட் கிளெமென்ட்டை வீழ்த்தி ஜெர்மனி வீரர் ரைனர் ஷட்லர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

புதன் கிழமையன்று போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆளுக்கு ஒரு செட் வெற்றி பெற்றிருந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் ரைன‌ர் ஷட்லர் 6- 3, 5- 7, 7- 6, 6- 7, 8- 6 என்று போராடி பிரான்ஸ் வீரர் ஆர்னாட் கிளெமென்ட்டை வீழ்த்தினார்.

அரையிறுதியில் ரைனர் ஷட்லர், பலமான ரஃபேல் நாடலை சந்திக்கிறார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் பயஸ் - லூயி மற்றும் நெஸ்டார்-ஜிமோஞ்ஜி இணைகள் மோதிய அரையிறுதி போட்டியில் ஆட்டம் நிறுத்தப்படும்போது நெஸ்டர் - ஜிமோஞ்ஜி இணை 7- 6, 4- 6, 6- 1, 3- 3 என்று முன்னிலை வகித்து வந்தனர், இன்று இந்த ஆட்டம் தொடர்ந்து நடைபெறும்.
மேலும்
தொடர்ந்து நழுவி வரும் ஒலிம்பிக் தகுதி!
ஒற்றையர் இறுதியில் வீனஸ்-செரீனா மோதல்!
விம்பிள்டன்: இறுதிக்கு முன்னேறினார் வீனஸ் வில்லியம்ஸ்!
பி.எம்.சி. தடகளம்: இந்தியா 3 தங்கம்!
இந்திய மகளிர் ரிலே அணி தகுதி பெறவில்லை!
ஒலிம்பிக் இரட்டையர் டென்னிஸில் சானியா-சுனிதா!