விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்று வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் ஒற்றையர் இறுதி சாம்பியன் பட்டப் போட்டியில் மோதுகின்றனர்.
உலகத் தரவரிசையில் 133-வது இடம் பெற்றிருந்தாலும், முன்னணி வீரர்களை அசத்தி வெற்றி பெற்ற சீன வீராங்கனை ஸெங் ஜீ நேற்று செரீனா வில்லியம்ஸிடம் 2- 6, 6- 7 என்ற நேர் செட்களில் வீழ்ந்து விம்பிள்டன் ரசிகர்களின் ஆவலான எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றம் அளித்தார்.
செரீனாவின் ஃபோர்-ஹேண்ட் ஷாட்கள் பல ஸெங் ஜீயிற்கு புரிய வருவதற்குள் ஆட்டம் முடிந்துவிட்டது.
மற்றொரு அரையிறுதியில் 5-ம் தரவரிசையில் உள்ள ரஷ்ய வீராங்கனை எலினா டீமென்டீவாவை அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸிடம் 1- 6, 6- 7 என்ற நேர் செட்களில் வீழ்ந்தார்.
முதல் செட்டில் டீமென்டீவா செய்த தவறுகளினால் 1- 6 என்று மோசமாக இழந்தார். இரண்டாவது செட்டை சுதாரித்து ஆடினாலும் 1 பிரேக் பாயிண்டை மட்டுமே வெற்றியாக மாற்ற முடிந்தது. ஆனால் இந்த முன்னிலையையும் கோட்டை விட்டு பிறகு ஆட்டம் சமமானது. அதில் டீமென்டீவா சர்வ்களிலும், ஷாட் தேர்வுகளிலும் செய்த தவறியதால் 7- 3 என்று தோற்றார்.
செரீனா-வீனஸ் சகோதரிகள் இதோடு 3-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதியில் மோதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|