வாட்ஃபோர்டில் நடைபெறும் பி.எம்.சி. கோல்டு ரேஸ் தடகளப் போட்டிகளில் இந்திய வீரர்கள் 3 தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
1,500 மீ தடகள ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் சதோலி ஹம்ஸாவும், 800 மீ ஓட்டப்பந்தயத்தில் சாஜீஷ் ஜோசப் என்ற தடகளவீரரும், மகளிர் 800 மீ. ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை சினிமோல் பௌலோஸும் தங்கம் வென்றனர்.
1,500 மீ ஆடவர் பிரிவில் இந்திய வீரர் சதோலி ஹம்ஸா 3:40.90 என்ற நேரக்கணக்கில் இலக்கை எட்டினார்.
800 மீ ஆடவர் பிரிவில் சாஜீஷ் ஜோசப் 1:48.25 என்ற நேரக்கணக்கில் இலக்கை எட்டி தங்கம் வென்றார்.
மகளிர் 800 மீ தடகளப்பிரிவில் இந்திய வீராங்கனை சினிமோல் பௌலோஸ் 2:03.87 என்ற நேரத்தில் இலக்கை எட்டி தங்கம் வென்றார்.
அடுத்தபடியாக இந்திய தடகள வீரர்கள் வரும் ஜூலை 8ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் சொல்லென்டுனா கிராண்ட் பிரீ தடகள போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
|