ஹெப்டத்லான் தடகள வீராங்கனை சோமா பிஸ்வாஸ் விளையாட்டு போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கொல்கத்தா விளையாட்டுத்துறை பத்திரிகையாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், கடுமையான பயிற்சி நடைமுறைகள் தனக்கு ஒத்து வராததால் ஓய்வு பெறும் முடிவு எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
31 வயதாகும் பிஸ்வாஸ், வரவிருக்கும் பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட விருப்பம் கொண்டிருந்ததாகவும், தற்போது அதற்கு தக்கவாறான உடற்தகுதி இல்லை என்றும் கூறியுள்ளார். பீஜிங் ஒலிம்பிக்கில் இவர் பங்கேற்றிருந்தால், அது 3-வது ஒலிம்பிக் பங்கேற்பு என்பது குறிப்பிடத்தக்கது.
2002-ஆம் ஆண்டு, 2006-ஆம் ஆண்டு, புசான் மற்றும் தோஹா ஆசியப் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றது தனக்கு மகிழ்ச்சியளிக்கும் நினைவு என்று அவர் தெரிவித்துள்ளார்.
|