விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் அரையிறுதிக்கு ஸ்பெயின் வீரர் ரஃபேல் நாடல், சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் ஆகியோர் தகுதி பெற, பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே நாடலிடம் தோல்வி தழுவி வெளியேறினார்.
மற்றொரு காலிறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் மாரட் சஃபின் ஸ்பெயின் வீரர் ஃபெலிசியானோ லோபஸை 3- 6, 7- 5, 7- 6, 6- 3 என்ற செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் தரவரிசையில் இல்லாத குரேஷிய வீரர் மரியோ ஆன்சிச்சை 6- 1, 7- 5, 6- 4 என்ற செட்களில் எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ரஃபேல் நாடல் 12-ம் தரவரிசையில் உள்ள பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரேயை 6- 3, 6- 2, 6- 4 என்று வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அரையிறுதியில் ரோஜர் ஃபெடரரும் மாரட் சஃபீனும் மோதுகின்றனர்.
மற்றொரு ஒற்றையர் காலிறுதியில் தரவரிசையில் இடம் பெறாத ஜெர்மனி வீரர் ஷட்லரும் பிரான்ஸ் வீரர் ஆர்னாட் கிளெமென்டும் மோதினார்கள். இதில் இருவரும் தலா ஒரு செட்டை வெற்றி பெற்றிருந்த போது ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர் அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் நாடலை எதிர்கொள்வார்.
|