முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கால்பந்து தரவரிசையில் ஸ்பெயின் முதலிடம்!  Search similar articles
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கால்பந்து தரவரிசையில் ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணி முதலிடம் பெற்றுள்ளது.

1992-ம் ஆண்டு கால்பந்து தரவரிசை அறிமுகம் செய்தது முதல், ஸ்பெயின் இம்முறைதான் முதலிடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் ஸ்பெயின் 4-வது இடம் வகித்தது.

கடந்த 4 ஆண்டுகளில் ஒரு அணி பங்கேற்கும் சர்வதேச கால்பந்து போட்டிகளில் பெறும் வெற்றிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

யூரோ 2008 இறுதிப்போட்டியில் தோல்வி தழுவிய ஜெர்மனி இரண்டு இடங்கள் முன்னேறி 3-வது இடம் வந்துள்ளது. இத்தாலி 2-வது இடம் பெற்றுள்ளது.

தென் அமெரிக்கக் கால்பந்து அணிகள் பிரிவில் அர்ஜென்டீனா அணி உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் இரண்டு பலவீனமான அணிகளுடன் டிரா செய்ததால் தரவரிசையில் தற்போது 6-வது இடம் வகிக்கிறது.

2004 யூரோ கால்பந்து சாம்பியனான கிரீஸ், 8வது இடத்திலிருந்து 18-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

எதிர்பாராத வகையில் யூரோ 2008 கால்பந்து தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய ரஷ்யா தரவரிசையில் 24-வது இடத்திலிருந்து 11-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரஷ்யா பெறும் சிறந்த தரவரிசை நிலை இது.

யூரோ 2008 கால்பந்து தொடருக்கு தகுதி பெறாமல் போன இங்கிலாந்து 6 இடங்கள் சரிந்து 15-வது இடத்தில் உள்ளது.
மேலும்
ஊக்க மருந்து: சீன வீரர்கள் 8 பேருக்குத் தடை!
மார்ஷல், ஹோல்டிங் வரிசையில் பிரட் லீ - ரிச்சர்ட்ஸ்!
தடகளம்: நரேஷ், காசிநாத் தங்கம்!
அரையிறுதியில் பயஸ்-லூயி இணை!
அரையிறுதியில் செரீனா, வீனஸ்!
ஸெங் ஜீ அரையிறுதியில் நுழைந்து சாதனை!