தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாக நிரூபணமான 8 சீன தடகள வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட வீரர்களில் மல்யுத்த வீரர் லூவோ மெங், நீச்சல் வீரர் அவ்யாங் பெங் ஆகியோர் சீன தேசிய அணியில் இடம்பெற்றிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு வாழ் நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த 2 வீரர்களின் பயிற்சியாளர்களுக்கும் வாழ் நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மற்ற 6 வீரர்களும் மாகாண அளவில் பிரதிநிதித்துவம் செய்தவர்கள். இதில் இரண்டு பேர் டைவ் விளையாட்டு வீரர்கள், இரண்டு பேர் தடகள வீரர்கள், ஒரு பளுதூக்கும் வீரர் மற்றும் ஒரு நீச்சல் வீரர் ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த 6 வீரர்களும் சீன தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
|