ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, மேற்கிந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்களான மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங், ஜொயெல் கார்னர், கர்ட்லி ஆம்புரோஸ் வரிசையில் இருப்பதாக மேற்கிந்திய முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மென் விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.
பிரட்லீ தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் தனது 171-வது ஒரு நாள் போட்டியில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார். குறைந்த போட்டிகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனை தற்போது பிரட் லீ வசமானது.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வகார் யூனிஸ் 186 ஒரு நாள் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையை பிரட் லீ முறியடித்துள்ளார்.
பிரட் லீ குறித்து ஆஸ்ட்ரேலிய பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த விவ் ரிச்சர்ட்ஸ், பிரட் லீ மேற்கிந்திய தீவுகளின் சிறந்த பந்து வீச்சாளர்களுக்கு ஒப்பானவர் என்று கூறியுள்ளார்.
மேலும் பிரட் லீ தனது உடற்தகுதியை பராமரிப்பது பற்றியும் ரிச்சர்ட்ஸ் புகழ்ந்து கூறியுள்ளார். அதாவது ஆட்டத்தின் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவர் பந்து வீச அழைக்கப்பட்டால், தனது பந்து வீச்சில் எந்த வித சமரசத்தையும் அவர் செய்து கொள்வதில்லை என்று விவ் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.
|