முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அரையிறுதியில் பயஸ்-லூயி இணை!  Search similar articles
விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய- செக் குடியரசு இணையான லியாண்டர் பயஸ்- லூகாஸ் லூயி இணை தகுதி பெற்றது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் 3-ம் தரவரிசையில் உள்ள இஸ்ரேல் இணையான ஜொனாதன் எர்லிச்- ஆன்டி ராம் இணையை 9-வது தரவரிசையில் உள்ள பயஸ்- லூயி இணை 6- 3, 6- 3, 6- 3 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

பயஸ்-லூயி இணை தங்களுக்கு கிடைத்த 6 பிரேக் பாயிண்ட் வாய்ப்புகளில் 4-ஐ வென்றது. ஆனால் இஸ்ரேல் இணை 8 பிரேக் பாயிண்ட் வாய்ப்புகளையும் வீணடித்தது.

மற்றொரு கா‌லிறுதியில் தென் ஆப்பிரிக்க- ஸ்வீடன் இணையான கெவின் ஆண்டர்சன்/ராபர்ட் லின்ட்ஸ்டட் இணையை சனடா-செர்பிய இணையான டேனியல் நெஸ்டார்/நெனாத் ஜிமோஞ்ஜில் இணை 7- 6, 6- 4, 6- 7, 6- 3 என்று வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

நெஸ்டார்- ஜிமோஞ்ஜி இணயை அரையிறுதியில் பயஸ்-லூயி இணை எதிர்கொள்கிறது.
மேலும்
அரையிறுதியில் செரீனா, வீனஸ்!
ஸெங் ஜீ அரையிறுதியில் நுழைந்து சாதனை!
சானியா-மேட்டக் இணை காலிறுதியில்!
அஞ்சு ஜார்ஜ் தங்கம் வென்றார்!
வீனஸ், செரீனா காலிறுதியில்!
ஃபெடரர், நாடல் காலிறுதியில்!