விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றுக்கு அமெரிக்க சகோதரிகள் செரீனா மற்றும் வீனஸ், ரஷ்ய வீராங்கனை எலெனா டீமின்டீவா, சீன வீராங்கனை ஸெங் ஜீ ஆகியோர் தகுதி பெற்றனர்.
14-ம் தரவரிசையில் உள்ள அக்னீஸ்கா ராத்வான்ஸ்கா என்ற போலந்து வீராங்கனையை 6-வது தரவரிசையில் உள்ள அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 6- 4, 6- 0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
முதல் சர்வ், இரண்டாம் சர்வ் இரண்டையுமே ராத்வான்ஸ்கா சரியாக வீசவில்லை. பிரேக் பாயிண்ட் வாய்ப்புகளையும் இவர் உருவாக்கிக் கொள்ளவில்லை இதனால் தோல்வி தழுவினார்.
5-வது தரவரிசையில் உள்ள ரஷ்ய வீராங்கனை எலெனா டீமென்டீவா 21-வது தரவரிசையில் உள்ள ரஷ்ய வீராங்கனை நாடியா பெட்ரோவாவை 6- 1, 6- 7, 6- 3 என்ற செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.
ஜெலெனா ஜான்கோவிச்சை வீழ்த்திய தாய்லாந்து வீராங்கனை தானாசுகர்னை 7-வது தரவரிசை அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் 6- 4, 6- 3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
|