முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
4-வது சுற்றில் ஹூவிட், சஃபின்!  Search similar articles
விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்ட்ரேலிய வீரர் லெய்டன் ஹூவிட், ரஷ்ய வீரர் மாரட் ச்ஃபின், குரேஷிய வீரர் மரியோ ஆன்சிச் ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

5-ம் தரவரிசையில் உள்ள ஸ்பெயின் வீரர் டேவிட் ஃபெரர் குரேஷிய வீரர் மரியோ ஆன்சிச்சிடம் 4- 6, 4- 6, 7- 6, 6- 7 என்ற செட்களில் தோல்வி தழுவினார்.

ஆன்சிசி தனது பலமான சர்வகளால் 23 ஏஸ்களை அடித்தார். ஆனால் ஃபெரரோ 5 ஏஸ்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதேபோல் முதல் சர்வ் வெற்றியும் ஆன்சிச்சிற்கு அதிகம்.

20-ம் தரவரிசையில் உள்ள ஆஸ்ட்ரேலிய வீரர் லெய்டன் ஹூவிட் தரவரிசையில் இல்லாத இத்தாலி வீரர் சிமோன் போலெல்லி என்பவரை 6- 1, 6- 3, 7- 6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ஹூவிட் முதல் சர்வ் வெற்றி விகிதம் இந்த விம்பிள்டன் போட்டிகளில் அதிகரித்துள்ளது. இதனால் இவர் அரையிறுதி வரை முன்னேறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

29-ம் தரவரிசையில் உள்ள இத்தாலி வீரர் செப்பியை ரஷ்ய வீரர் சஃபின் 7- 6, 3- 6, 7- 6, 6- 4 என்ற செட்களில் இறுதி- 16 சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.

ஸ்பெயின் வீரர் வெர்டாஸ்கோ, சைப்ரஸின் மர்கோஸ் பக்தாதிஸ், சுவிஸ் வீரர் வாவ்ரின்கா, ஸ்பெயினின் லோபஸ் ஆகியோரும் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
மேலும்
இவானோவிச், மவுரிஸ்மோ தோல்வி!
விம்பிள்டன்: ரோஜர் ஃபெடரர் வெற்றி!
விம்பிள்டன் டென்னிஸ்: குஸ்நட்சோவா, சக்விடாட்சி வெற்றி!
இந்திய 4x400 ரிலே மகளிர் அணி ஒலிம்பிக் தகுதி!
ரோடிக் மோசமான தோல்வி!
பயஸ் இணை 3-வது சுற்றில்! பூபதி இணை வெளியேற்றம்!