விம்பிள்டன் ஆடவர் இரட்டையர் 3-வது சுற்றுக்கு பயஸ்-லூயி இணை தகுதி பெற்றது. முதல் சுற்று ஆட்டத்தில் 4-ம் தரவரிசையில் உள்ள பூபதி- நோல்ஸ் இணை தோல்வி தழுவி வெளியேறியது.
2-வது சுற்று இரட்டையர் ஆட்டத்தில் 9-ம் தரவரிசயில் உள்ள இந்திய-செக் குடியரசு இணையான பயஸ்-லூயி இணை அமெரிக்க-ஆஸ்ட்ரேலிய இணையான புடோராக்-ஃபிஷர் இணையை 6- 3, 7- 6, 6- 3 என்ற செட்கணக்கில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
மற்றொரு இரட்டையர் சுற்று ஆட்டத்தில் 2-ம் சுற்றுக்கு முன்னேறிய இந்திய- பாகிஸ்தான் இணையான போபண்ணா-குரேஷி இணை ஸ்பெயின் இரட்டையர் இணையான பியுஜோல்-வென்ச்சுரா இணையிடம் 2- 6, 4- 6, 2- 6 என்ற செட்களில் வீழ்ந்தனர்.
|