முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
விம்பிள்டன்: ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி!  Search similar articles
விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 3-ம் இடத்தில் உள்ள மரியா ஷரபோவா சக ரஷ்ய வீராங்கனையான, அதிகம் அறியப்படாத ஆலா குத்ரியாவ்சேவாவிடன் 2- 6, 4- 6 என்ற நேர் செட்களில் அதிர்ச்சித் தோல்வி தழுவி வெளியேறினார்.

மகளிர் இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய-அமெரிக்க இணையான சானியா-மேட்டக் இணை பிரிட்டன் இணையை 6- 4, 6- 2 என்று வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மரியா ஷரபோவா 8 முறை சர்வ்களில் இரட்டைத் தவறுகளை செய்தார். அதுவும் 3 முறை முதல் செட்டின் ஒரே ஆட்டத்தில் செய்தார். மேலும் ஃபோர் கேண்ட் ஷாட்களும் ஷரபோவாவிற்கு கைகொடுக்கவில்லை. அரிதான ஒரு மோசமான ஆட்ட தினமாக நேற்று ஷரபோவாவிற்கு அமைந்தது.

மற்றொரு ஆட்டத்தில் 9-ம் தரவரிசையில் உள்ள ரஷ்ய வீராங்கனை தினாரா சஃபீனா தைபே வீராங்கனை சு-வீ சியேவை 6- 3, 6- 2 என்ற செட்களில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

செர்பிய வீராங்கனை ஜெலெனா ஜான்கோவிச் ஸ்பெயினின் அதிகம் அறியப்படாத நவர்ரோவை 6- 1, 6- 3 என்று வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

லின்ட்சே டேவன் போர்ட் காயம் காரணமாக விளையாட முடியாததால் அர்ஜென்டீனாவின் துல்கோ 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். பெலாரஸ் வீராங்கனையான 16-ம் தரவரிசையில் உள்ள அஸரென்கா ருமேனியாவின் சோர்னா கிற்ஸ்டீயை 6- 1, 6- 3 என்ற செட்களில் வீழ்த்தினார்.

இஸ்ரேல் வீராங்கனை சகாரா பியர் பிரான்சின் எமிலி லோய்ட் என்பவரை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 21-ம் தரவரிசையில் உள்ள ரஷ்ய வீராங்கனை நாடியா பெட்ரோவா இத்தாலியின் சான்டாஞெலோவை 6- 4, 7- 5 என்று வீழ்த்‌தி 3-வது சுற்றில் நுழைந்தார்.

மற்ற 2-வது சுற்று ஆட்டங்களில் டீமென்டீவ, ஜப்பானின் சூஜியாமா, டென்மார்க்கின் வூஸ்னியாகி, சீனாவின் ஷுவாய் பெங், 13-ம் தரவரிசை ரஷ்ய வீராங்கனை ஸ்வொனரேவாவை வீழ்த்தி தாய்லாந்து வீராங்கனை தானாசுகர்ன் ஆகியோரும் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
மேலும்
யூரோ: ஸ்பெயின் அபார வெற்றி! இறுதிக்குள் நுழைந்தது!
ரஃபேல் நாடல், வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி!
சானியா மிர்சா போராடி தோல்வி!
அரையிறுதியில் ரஷ்யா-ஸ்பெயின் மோதல்!
ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி!
குஸ்னெட்சொவா, இவானோவிச், செரீனா வெற்றி!