முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
யூரோ: ஸ்பெயின் அபார வெற்றி! இறுதிக்குள் நுழைந்தது!  Search similar articles
யூரோ 2008 கால்பந்து போட்டி அரையிறுதியில் ரஷ்யாவை 3- 0 என்று வீழ்த்தி ஸ்பெயின் இறுதிப் போட்டியில் ஜெர்மனியை சந்திக்கிறது.

இடைவேளை வரை இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. ஆனால் இடைவேளைக்கு பிறகு 50வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஸாவி முதல் கோலை அடிக்க அதன் பிறகு டேவிட் குய்சா, டேவிட் சில்வா ஆகியோர் இரண்டு கோல்களை அடித்து ரஷ்யாவின் கனவை தகர்த்தனர்.

ரஷ்ய வீரர் ஆந்த்ரீ அர்ஷவின் ஸ்பெயின் வீரர்களால் அமுக்கப்பட்டார். மாறாக ஸ்பெயின் வீரர் ஸாவி 50-வது நிமிடத்தில் தனியாக பந்தை கடைந்து ரஷ்யாவின் பெனால்டி பகுதிக்குள் கொண்டு சென்று கோலாக மாற்றினார்.

டேவிட் வில்லாவிற்கு பதிலாக இறங்கிய ஃபேபர்காஸ் ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் ரஷ்ய தடுப்பு வீரர்கள் கண்ணில் மண்ணைத்தூவி ஒரு ஷாட்டை லேசாக தூக்கி அடிக்க அதனை குய்சா கோலாக மாற்றினார்.

3-வது கோலை உருவாக்கியவரும் ஃபேபர்காஸ்தான். இவர் படு வேகமாக பந்தை எடுத்து சென்று சில்வாவிடம் அடிக்க அவர் அதனை 3-வது வெற்றி கோலாக மாற்றினார்.

ஜெர்மனியும்-ஸ்பெயினும் வரும் ஞாயிறன்று சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் மோதுகின்றனர்.
மேலும்
ரஃபேல் நாடல், வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி!
சானியா மிர்சா போராடி தோல்வி!
அரையிறுதியில் ரஷ்யா-ஸ்பெயின் மோதல்!
ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி!
குஸ்னெட்சொவா, இவானோவிச், செரீனா வெற்றி!
வில்வித்தை: இந்திய வீரர்கள் ஏமாற்றம்!