முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி!  Search similar articles
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் சுற்றில் நேற்று முதல் அதிர்ச்சி வெளியேற்றம் நிகழ்ந்தது. 3-ம் தரவரிசையில் உள்ள ஆஸ்ட்ரேலிய ஓபன் சாம்பியனான ஜோகோவிச் நேர் செட்களில் ரஷ்ய வீரர் மாரட் சஃபீனிடம் தோல்வி தழுவி 2-வது சுற்றிலேயே வெளியேறினார்.

துவக்கத்திலிருந்தே சர்வில் இரட்டைத் தவறுகள் செய்ய தொடங்கி ஷாட்களையும் சரிவர ஆடாமல் மாரட் சஃபீனிடம் 4- 6, 6- 7, 2- 6 என்ற நேர் செட்களில் தோற்று 2-வது சுற்றிலேயே வெளியேறினார். சஃபீன் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் ஸ்வீடனின் ராபின் சோடர்லின்ங்கை 6- 3ம் 6- 4, 7- 6 என்று வீழ்த்தி சுலபமாக 3-வது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

5-ம் தரவரிசையில் உள்ள ஸ்பெயின் வீரர் டேவிட் ஃபெரர் ரஷ்யாவின் ஆந்த்ரீவை 3- 6, 6- 3, 6- 4, 6- 2 என்ற செட்களில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

20-ம் தரவரிசையில் உள்ள ஆஸ்ட்ரேலிய வீரர் லெய்டன் ஹூவிட் ஸ்பெயின் வீரர் ஆல்பர்ட் மோன்டேன்ஸை 7- 6, 6- 0, 6- 2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

10-ம் தரவரிசையில் உள்ள சைப்ரஸ் வீரர் பக்தாதீஸ், 11-ம் தரவரிசை‌யி‌ல் உ‌ள்ள செக் வீரர் பெர்டிச், 22-ம் தரவரிசையில் உள்ள ஃபெர்னான்டோ வெர்டாஸ்கோ, 13-ம் தரவரிசையில் உள்ள சுவிஸ் வீரர் வார்வின்கா, இத்தாலி வீரர் ஆந்த்ரியாஸ் செப்பி உள்ளிட்ட வீரர்கள் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
மேலும்
குஸ்னெட்சொவா, இவானோவிச், செரீனா வெற்றி!
வில்வித்தை: இந்திய வீரர்கள் ஏமாற்றம்!
பரபரப்பான ஆட்டத்தில் ஜெர்மனி வெற்றி!
ஜெர்மனி-துருக்கி இன்று பலப்பரிட்சை!
போபண்ணா- குரேஷி இணை முன்னேற்றம்!
ஷரபோவா, ஜான்கோவிச் முன்னேற்றம்!